எடப்பாடியாரின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் ஸ்ரீ ஊஞ்சல் பொன்னியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு!
ராணிப்பேட்டை ,மே 12 -
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு நெமிலி நகர செய லாளர் செல்வம் தலைமையில் அதிமுக வினர் ஸ்ரீ ஊஞ்சல் பொன்னியம்மன் கோவிலில் தமிழகத்தில் மீண்டும் எடப் பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சி மலர்ந்திட, அவர் நீண்ட ஆயுளோடு தமிழகத்தையும் அதிமுகவையும் வழி நடத்திட வேண்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு செய்தனர். இதில் நெமிலி நகர பொருளாளர். நவநீத கிருஷ்ணன், மேலவை பிரதிநிதி. சத்ய மூர்த்தி, என். விநாயகம், மாவட்ட பொறுப் பாளர்கள். சுகுமார், தினேஷ், நெமிலி நகர இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர். சுசில் மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட
செய்தியாளர் மு. பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக