நெமிலி அருகே சேந்தமங்கலத்தில் நடைபெற்ற திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் அமைச்சர் ஆர். காந்தி பங்கேற்பு!
ராணிப்பேட்டை , மே 12 -
இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நான் காண்டு கழக அரசின் சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் சேந்தமங் கலத்தில் நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழு பெருந்தலை வருமான பெ. வடிவேலு தலைமையில், ஒன்றிய அவைத்தலைவர். புருஷோத்த மன் வரவேற்புரையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் கலந்து கொண்டு பேசினார். மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர். பவானி வடிவேலு, பொதுக் குழு உறுப்பினர். அப்துல் நசீர், ஒன்றிய நிர்வாகிகள் ஆர்.பாண்டியன், பாரதி ஜெயச்சந்திரன், டி.சங்கர், ஏ.வினாயகம், ஆர்.அரிகிருஷ்ணன், இ.பெருமாள், எஸ்.சம்மந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கழக செய்தி தொடர்பாளர் தடா.ஒ.சுந்தரம், தலைமை கழகபேச்சாளர் நெல்லிக்குப்பம் வி. ஆர்த்தி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் மு.கண்ணையன், மாட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் NK. சரவணன், மா.இ.அ.து.அ எம்.பி.பாபு, நெமிலி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள், திமுக கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். இறுதியாக ஒன்றிய துணை செயலாளர். முகமது அப்துல் ரகுமான் நன்றி கூறினார்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக