நடிகர் விஜய்க்கும் எனக்கும் எந்தசண்டை யும் இல்லை விசமங்கலம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடிகர் போஸ் வெங்கட் பேச்சு!
திருப்பத்தூர் ,மே12 -
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் விசமங்கலம் பகுதியில் கந்திலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ் தலைமையில்நடைபெற்றது
இதில் திருப்பத்தூர் நகர செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் நகரமன்ற தலைவர் அரசு, ஒன்றிய அவைத் தலை வர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித் தனர். இதற்கு சிறப்புஅழைப்பாளர்களாக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்ல தம்பி மற்றும் தலைமை கழக பேச்சாள ரும் சினிமா நடிகருமான போஸ் வெங்கட் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இப்போது தலைமை கழக பேச்சாளர் போஸ் வெங்கட் பேசுகையில். எனக்கும் நடிகர் விஜய்க்கும் எந்த ஒரு சண்டையும் இல்லை சச்சரவுமில்லை அவர் முதலில் அரசியல் செய்யட்டும் . தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு சொன்னதையும் செய்யும் சொல்லாத தையும் செய்யும் அதற்கு எடுத்துக் காட்டாக காலை உணவு திட்டம், மகளிர் உரிமைத்தொகை திட்டம், விடியல் பயண திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என பேசினார்.நேற்று வந்து கட்சி ஆரம்பித்து விட்டு நேராக முதல்வர் ஆகிவிட்டதாக கனவு காண்பதை விடுத்து மக்களை சந்திக்க சொல்லுங்கள். என்றார் வரையறுப்புரை. ஹேமலதா வினோத் ஒன்றிய கவுன்சிலர் இதில் திமுக நிர்வாகிகள் துணை ஒன்றிய செயலாளர் சீனிவாசன், தசரதன், குலோத்துங்கன், தெய்வகுமார் மற்றும் திமுகவின் இன்னாள் முன்னாள் நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மோ. அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக