சாராயம் விற்பதாக கூறி தொடர்ந்து சிறையில் அடைக்கும் போலீசார் பலிகடாவா என பாதிக்கப்பட்டு வரும் பெண் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 12 மே, 2025

சாராயம் விற்பதாக கூறி தொடர்ந்து சிறையில் அடைக்கும் போலீசார் பலிகடாவா என பாதிக்கப்பட்டு வரும் பெண் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு!

சாராயம் விற்பதாக கூறி தொடர்ந்து சிறையில் அடைக்கும் போலீசார்  பலிகடாவா என பாதிக்கப்பட்டு வரும் பெண் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு!
திருப்பத்தூர் , மே‌ 12 -

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மட்றப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் துளசி (வயது 46)இவருக்கு கோவிந்தம்மாள் என்கிற மனைவியும் தினேஷ் உட்பட மூன்று மகன்கள் உள்ளனர். இவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கள்ளச்சாரயம் விற்பனை செய்து வந்துள்ளதால் பல்வேறு முறை துளசி அவரது மனைவி சிறையில் அடைக் கப்பட்டு உள்ளனர். இதனையெடுத்து தமிழகத்தை உலுக்கிய கள்ளக் குறிச்சி யில் கள்ள சாராயத்தால் சுமார் 76 நபர்கள் உயிரிழந்தனர்.இதனால் தமிழக அரசு கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து திருப்பத்தூர் மாவட்டத்தில் கள்ள சாராயம் இல்லா மாவட்டமாக திகழந்து வருகிறது என கூறப்படுகிறது. இந்த நிலையில் துளசி என்பவர் கடந்த ஏழு மாதங்களாக கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்படுவதில் லை என கூறப்படுகிறது. ஆனால் துளசி என்பவரை அவ்வபோது திருப்பத்தூர் மதுவிலக்கு போலீசார் பிடித்து சாராயம் வழக்கில் சிறையில் அடைத்து வந்துள்ள னர். பின்னர் துளிசியின் மகன் தினேஷ் என்பவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த வாரம் மீண்டும் அவரது மனைவி கர்ப்பிணியான அவரை திருப்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது இதனை பார்க்க சென்ற தினேஷ் என்பவரை மதுவிலக்கு போலீசார் திருப்பத்தூரிலே பிடித்து கள்ளசாரயம் விற்பதாக கூறி சிறையில் அடைத்து உள்ளனர்.இந்த நிலையில் நேற்று துளசி என்பவரும் அவருடன் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் விவசாய நிலத்தில் வேலை செய்து வந்த நிலையில் மதுவிலக்கு போலீசார் அங்கு சென்று விசாரணை செய்வதாக கூறி மாலை 5மணிக்கு அழைத்து வந்துள்ளனர்.
இதனையெடுத்து வெகுநேரம் ஆகியும் கணவர் வீடு திரும்பவில்லை என கூறி அவரது மனைவி கோவிந்தம்மாள் காவல் நிலையம், உள்ளிட்ட பல்வேறு இடங் களில் தேடி வந்துள்ளார். பின்னர் மீண்டும் மதுவிலக்கு காவல் நிலையத் திற்கு சென்ற போது அங்கு துளசி என்பவரை போலீசார் கள்ளச்சாரயம் விற்பனை செய்ததாக கூறி கட்டாயப் படுத்தி கையெழுத்து பெற்று கொண்ட தாக துளிசி என்பவர் அவரது மனைவி யிடம் கூறியுள்ளார். இதனை போலீசாரு டன் கேட்ட போது கோவிந்தம்மாளை மதுவிலக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் உலகநாதன் என்பவர் கடுமை யாக சாடி, ஆபாசமாக பேசி உள்ளார் என கூறப்படுகிறது. பின்னர் மதுவிலக்கு போலீசார் துளசி என்பவரை சுமார் 5 லிட்டர் கள்ளச்சாரயம் விற்பனை செய்வ தற்காக வைத்து இருந்ததாக கூறி அதனை பறிமுதல் செய்து திருப்பத்தூர் ஒருகிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படு த்தி சிறையில் அடைத்துள்ளனர். இச் சம்பவம் குறித்து அவரது துளசி மனைவி கோவிந்தம்மாள் கூறுகையில் நாங்கள் கடந்த ஏழு மாதங்களாக கள்ளச்சாரயம் விற்பனை செய்வதில்லை எனவும் இந்த ஏழுமாதத்தில் எனது கணவரை ஐந்து முறை போலீசார் சிறையில் அடைத்து ள்ளனர்.எனவே தொடர்ந்து கள்ளச் சாராயம் விற்பதாக கூறி எனது கணவர் மற்றும் மகன் மீது போலீசார் பொய்யான வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.எனவே எங்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு மற்றும் உயர் காவல் துறை அதிகாரிகள் நீதி வழங்கிட வேண்டும் என இன்று நடைபெற்றமக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரி டம் மனு அளித்தார்.

 செய்தியாளர்
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad