முதல்வரின் முகவரியில் புகார் அளித்தால் லாரி ஏற்றி கொலை செய்ய தயாராக இருப்பதாக காவல் துறை சொல்வதால் பெரும் அதிர்ச்சி
வாயில் கருப்பு துணி கட்டி கோரிக்களை கழுத்தில் மலையாக அணிந்து சமுக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் நூதன முறையில் ஆட்சியரிடம் மனு
சட்டம் ஒழுங்கு தொடர்பாக புகாரளிக்க 100க்கும் போன் செய்தால் சமூக ஆர்வலர்களை தாக்க வீட்டுக்கு 100 பேர் வருகின்றனர்
சமூக ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
எங்களுடைய உயிருக்கு எந்த நேரத்தில் ஆபத்து வரலாம் ஆனால் அநீதிக்கு எதிராக நாங்கள் நடத்தி வரும் போராட்டத்திலிருந்து எந்த சூழ்நிலையிலும் பின் வாங்க மாட்டோம்
அரசாங்க இடங்களை பலம் படைத்தவர்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் புகாரளிப்பது குற்றமா?
முதல்வரின் முகவரியில் புகார் மனு அளித்தால் மனுவை முடிக்க எழுதி தர வேண்டுமென மிரட்டி அச்சுறுத்தும் அனுப்பர்பாளையம் காவல் நிலையம் மீது நடவடிக்கை தேவை
அரசு இடங்களை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட முறைகேடுகளுக்கும் அநீதிகளுக்கு எதிராகப் போராடும் சமூக ஆர்வலர்கள் முதல்வரின் முகவரியில் புகார் அளித்தால் லாரி ஏற்றி கொலை செய்ய தயாராக இருப்பதாக காவல் துறை சொல்வது தொடர்பாகவும் சிறப்பு விசாரணை வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் து.கிருஸ்துராஜ் ஐஏஎஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
அப்போது பல்வேறு புகாரளித்த பிறகும்கூட எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை உணர்த்தும் நோக்கில் வாயில் கருப்புத் துணி கட்டி வந்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத்தலைவர் ஈ.பி.அ.சரவணன் மனு அளித்தனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக