இந்த நிகழ்விற்கு ஆரம்பமாக சபை ஊழியர் ஸ்டான்லி ஜான்சன் துரை ஆரம்ப ஜெபம் செய்தார்கள். திருமறையூர் சேகர நிர்வாகஸ்தர் ஜெயபால் தலைமை வகித்தார். சேகர செயலாளர் ஜாண் சேகர் முன்னிலை வகித்தார். திருமறையூர் சேகர குருவானவர் ஜாண் சாமுவேல் கலை மற்றும் ஓவியம் கற்று கொள்ளுவத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
ஓவிய பயிற்சியாளர் ரோஸ்லின் மோசஸ் சிறப்புரையாற்றினார். நாசரேத் மற்றும் சுற்று வட்டாரத்தில் இருந்து அநேக பள்ளி மற்றும் கல்லூரி பிள்ளைகள் கலந்துகொண்டார்கள். இப்பயிற்சி 12ம் தேதி ஆரம்பிக்கப்பட்டு 18ம் தேதி ஞாயிறு வரை நடைபெறும்.
இந்நிகழ்வில் பாக்கியராஜ், ஆசீர் துரைராஜ் ஜெயசிங், மோசஸ் தயான், ஆலய பணியாளர் ஆபிரகாம் மற்றும் அநேகர் கலந்துக் கொண்டார்கள்.
இந்நிகழ்விற்கான ஏற்பாட்டை திருமறையூர் சேகர குருவானவர் ஜாண் சாமுவேல் செய்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக