பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் வடவள்ளி சின்மயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் 77 பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில்100% தேர்ச்சி பெற்று மாணவ மாணவியர் சாதனை படைத்துள்ளனர்.
பிரணீப் 496 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதல் மாணவனாக முத்திரை பதித்துள்ளார். இவர் கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களில் நூறு மதிப்பெண் பெற்றுள்ளார்.
488 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தில் ஹரிவிஷாவும், 485 மதிப்பெண்கள் பெற்று ஹர்ஷா, நவசுஜா மற்றும் அஸ்வின் மெய்யப்பன் ஆகிய மூவரும் மூன்றாம் இடம் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். அஸ்வின் மெய்யப்பன், ஹர்ஷா இருவரும் அறிவியல் பாடத்தில் நூறு மதிப்பெண்களும் லக்ஷ்மி நாராயணன் சமூக அறிவியல் பாடத்தில் நூறு மதிப்பெண்கள் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளனர்.
480 மதிப்பெண்கள் பெற்று கவிநயாவும் 477 மதிப்பெண்கள் பெற்ற அஸ்வத் நான்காம் மற்றும் ஐந்தாம் இடத்தில் உள்ளனர்.
450 மதிப்பெண்களுக்கு மேல் 22 மாணவர்களும் 400க்கு மேல் 33 மாணவர்களும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணாக்கர்களுக்கும் பள்ளித் தாளாளர் திரு.நிர்மல் குமார் ஜெயின்ஜி, பள்ளி முதல்வர். திருமதி. உமாதேவி துரைசாமி ஆகியோர் இனிப்புகள் வழங்கி தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஸ்வாமினி அம்மா சம்பிரதிஷ்டானந்தாஜி அவர்கள் பள்ளித் தாளாளர், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியருக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும் இப்பள்ளி பிளஸ் 1 மற்றும் பிளஸ்2 பொதுத் தேர்விலும் 100% தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக