மக்களைத் தேடி மாநகராட்சி சிறப்பு முகாம் : - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 20 மே, 2025

மக்களைத் தேடி மாநகராட்சி சிறப்பு முகாம் :



ஈரோடு மாநகராட்சியில் நான்கு மண்டலங்களில், 60 வார்டுகள் உள்ளன. பொதுமக்களுக்கு மாநகராட்சியில் வழங்கப்படும் சேவைகளை எளிமைப்படுத்தும் வகையில், மக்களை தேடி மாநகராட்சி என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.


இதில் மக்கள் வசிக்கும் பகுதிக்கே, மாநகராட்சி அலுவலர்கள் சென்று, சொத்து வரி, காலியிட வரி, வரி இனங்கள் பெயர் மாற்றம், புதிய குடிநீர் இணைப்பு, புதிய பாதாள சாக்கடை இணைப்பு, பெயர் திருத்தம் போன்ற சேவைகள் வழங்குகின்றனர்.


அந்த வகையில், ஈரோடு மாநகராட்சி 2வது மண்டலத்திற்கு உட்பட்ட, 5வது வார்டு கொங்கம்பாளையம் பகுதியில், மக்களை தேடி மாநகராட்சி சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை மாநகராட்சி மேயர் நாகரத்தினம் துவக்கி வைத்தார்.


2வது மண்டல தலைவர் சுப்பிரமணியம், துணை ஆணையர் தனலட்சுமி, கவுன்சிலர் கௌசல்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதில், சொத்து வரி, காலியிட

வரிக்கான பெயர் மாற்றம், திருத்தம்,

பாதாள சாக்கடை இணைப்பு, குடிநீர்

இணைப்புக்கான விண்ணப்பங்களும்,

புதிய வரி விதிப்புக்கான

விண்ணப்பங்களும் பெறப்பட்டது.


முகாமில், பொதுமக்களிடம் பெற்ற 400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில், 150 விண்ணப்பங்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு, அவர்களிடம் அதற்கான உத்தரவு ஆணைகள் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad