நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கால்பந்து பயிற்சி முகாம் நிறைவு விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 20 மே, 2025

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கால்பந்து பயிற்சி முகாம் நிறைவு விழா.

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கால்பந்து பயிற்சி முகாம் நிறைவு விழா

நாசரேத், மே 19, நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கால்பந்து பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது. நாசரேத் யோவான் பேராலய தலைமை குரு ஹென்றி ஜீவானந்தம் ஆரம்ப ஜெபம் செய்தார். தமிழ்நாடு கால்பந்து அணியின் முன்னாள் வீரர்கள் ஜெபராஜ் மற்றும் நிக்கோலஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் சிறப்பு விருந்தினர்களை வரவேற்று கௌரவித்தார். தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம் பேசுகையில், முகாமில் பங்குபெற்ற மாணவர்களை பாராட்டுவதுடன் தொடர்ந்து பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும், பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும், நல்லொழுக்கம் உள்ள மாணவர்களாக பிறருக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட வேண்டும், பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

கால்பந்து பயிற்சி முகாம் மே 1ம் தேதி முதல் நடைபெற்றது. 60 மாணவர்கள் கலந்து கொண்டனர்.முகாமில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன. அனைத்து நாட்களிலும் தவறாமல் முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. 

விளையாட்டு வீரர்களுக்கு எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய வேலை வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. உடற்கல்வி ஆசிரியர் தனபால் நன்றி கூறினார். நிறைவு விழாவின் முடிவில் மாணவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் குணசீலராஜ், உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், உடற்கல்வி ஆசிரியர் சுஜித் செல்வ சுந்தர், மூத்த கால்பந்து வீரர்கள் நசரேயன், ஜாண், நேவின், ரோக்லன்ட், ஞான முத்துராஜ், பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad