உதகை எம் பாலடா அருகில் உள்ள அண்ணாநகர் பகுதியில் சிறுத்தை அடிக்கடி உலா வருவதால் மக்கள் அச்சம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 19 மே, 2025

உதகை எம் பாலடா அருகில் உள்ள அண்ணாநகர் பகுதியில் சிறுத்தை அடிக்கடி உலா வருவதால் மக்கள் அச்சம்.

 


உதகை எம் பாலடா அருகில் உள்ள அண்ணாநகர் பகுதியில் சிறுத்தை அடிக்கடி உலா வருவதால் மக்கள் அச்சம்.       


நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள எம் பாலடா அருகில் அண்ணா நகர் பகுதியில் இரவு நேரங்களில் சிறுத்தை கரடி காட்டுமாடு காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் தினந்தோறும் உலா வருகின்றன இப்பகுதிகள் மின்விளக்குகள் இல்லாததால் காட்டு மிருகங்கள் எளிதாக வந்து செல்கின்றன இங்கு கேரட் சுத்தம் செய்யும் எந்திரம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது இதில் இரவு நேரங்களில் மக்கள் கேரட் கழுவும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் அருகில் அண்மையில் சிறுத்தை ஒன்று உலா வந்தது இதைக் கண்ட ஊழியர் ஒருவர் டார்ச் லைட் அடித்து சிறுத்தையை விரட்டி உள்ளார் இப்பகுதியில் இரவு நேரங்களில் மக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது ஆகவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் இப்பகுதியில் மின் இணைப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் காட்டு விலங்குகளுக்கு நிரந்தர தீர்வு வனத்துறையினர் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். 


நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad