நடவடிக்கை
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.ஸ்டாலின் உத்தரவுப்படி காவல்துறை காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் கன்னியாகுமரி மேற்பார்வையில் கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறையினர் விபத்தை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று கன்னியாகுமரி போக்குவரத்து காவல் ஆய்வாளர். அருண், போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் போக்குவரத்து காவலர்கள் கன்னியாகுமரி ரவுண்டானா சர்ச்ரோடு பகுதியில் வாகன தணிக்கையின் போது 18 வயது குறைவான ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம்
ஓட்டி வந்த 5 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் 18 வயது குறைவான குழந்தைகளிடம் வாகனங்களை இயக்க அனுமதிக்ககூடாது என பெற்றோர்களிடத்தில் கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் வாகன விபத்து உயிரிழப்பை பாதியாக குறைத்து தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக கன்னியாகுமரி திகழ்வது குறிப்பிடதக்கது.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்,
என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக