திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளின் தேர்ச்சியை விட தனியார் பள்ளிகளின் தேர்ச்சி உயர்வு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 8 மே, 2025

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளின் தேர்ச்சியை விட தனியார் பள்ளிகளின் தேர்ச்சி உயர்வு.

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளின் தேர்ச்சியை விட தனியார் பள்ளிகளின் தேர்ச்சி உயர்ந்தது :

தமிழகம் முழுவதும் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. 

அதில் தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் திருநெல்வேலி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள் சில்வர் ஜூப்ளி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நூற்றுக்கு நூறு சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இதில் விஜயா ஸ்ரீ என்ற மாணவி 600க்கு 597 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதல் இடத்தை பிடித்துள்ளார். வெங்கட் பிரசன்னா என்ற மாணவர் 600 க்கு 595 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாம் இடத்தினையும் மீனாட்சி என்ற மாணவி 593 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் நிர்வாகி ஜெயேந்திரா மணி என்பவர் கோப்பைகளையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவப்படுத்தினார்.

ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் இனிப்பு கொடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக அப்பள்ளியில் பயின்ற மாணவி கூறும் போது தங்கள் ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்போடும் ஒரு வருடம் முழுவதும் விடாமுயற்சியுடன் படித்ததன் காரணமாக இன்று இந்த அளவிற்கு தங்களால் மதிப்பெண்கள் பெற முடிந்தது எனவும் பாடம் நடத்துகின்ற வேளையில் எந்த பாடத்தில் எந்தவிதமான சந்தேகங்கள் கேட்டாலும் அதனை உடனுக்குடன் தெளிவுபடுத்தி பொது தேர்வினை எழுதும் போது மிகவும் தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் இந்த தேர்வுகளை நாங்கள் எதிர்கொண்டோம், மேலும் கடவுளின் ஆசியோடும் பெற்றோர்களின் ஒத்துழைப்போடும் ஆசிரியர் ஆசிரியர்களின் முழு உதவியோடும் இந்த பொது தேர்வுகளை நாங்கள் திறம்பட எழுத முடிந்தது. அதன் காரணமாகத்தான் இன்று பள்ளி அளவில் நாங்கள் சிறப்பான ஒரு மதிப்பெண்களை பெற்று எங்களது பெற்றோர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் நாங்கள் பெருமை சேர்த்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad