மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் ஆலோசனையின்படி, 2025 ஆம் ஆண்டு மே மாதத்திற்கான கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 13.05.2025 அன்று காலை 11 மணியளவில் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.
எனவே, தூத்துக்குடி கோட்டத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தைச் சேர்ந்த விவசாய பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் பிரபு கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக