தானிஷ் அஹமது தொழில் நுட்ப கல்லூரியில் தொடர்ந்து எட்டாவது முறையாக சர்வதேச கருத்தரங்கம்!
கோயம்புத்தூர் கா.கா.சாவடியில் அமைத்துள்ள தானிஷ் அஹமது தொழில் நுட்ப கல்லூரியில் தொடர்ந்து எட்டாவது முறையாக சர்வதேச கருத்தரங்கானது சனிக்கிழமை 03.05.2025 அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இக்கருத்தரங்கிற்கு இணையத்தின் வாயிலாக முனைவர் முகமது முனீர், எகிப்து மற்றும் முனைவர் எஸ் ஆதின மல்லிகை பாண்டியன், நிறுவனர், ஆதின பாண்டியனே பிரை வேட் லிமிடேட் சிறப்பு விருந்தினராக கலத்து கொண்டு உரையாற்றினார். அவர் இன்றைய சூழலில் மாணவ-மாணவியர்கள் புதிய தொழில் நுட்ப ஆராய்ச்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு புதிய நவீன படைப்புகளை உருவாக்கி அதனை உலகளாவிய சந்தைப்படுத்தல் வேண்டும் என்றார். பொறியாளர்கள் அதிக அளவில் தொழில் முனைவோராக மாற வேண்டும் என்று தனது சிறப்பு ரையில் கூறினார் . இக்கருத்தரங்கில் 120 மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் 8 அமர்வு களில் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் முனை வர். பால்ராய், முனைவர். ஆர்.கார்த்திக், முனைவர். வேல்கார்த்திக் முனைவர் இ.நந்தகுமார், முனைவர்.B.நாதன், முனைவர் L.முத்துவேல், முனைவர் P.தேவேந்திரன். முனைவர்.J.சதீஷ் குமார் ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகளை பகுப்பாய்வு செய்து சர்வதேச கட்டுரை பதிப்பக்கத்துக்கு பரிந்துரைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் திரு. கே. அ. அக்பர் பாஷா அவர்கள் தலைமை வகித்தார். கல்லூரி யின் தலைமை செயல் நிர்வாக அதிகாரி திரு.அ. தமீஸ் அகமது அவர்கள் தலை மை வகித்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர் திரு.கே.ஜி. பார்த்திபன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். முனைவர்.C.செல்வமுருகன் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சிகாண ஏற்பாட்டி னை முனைவர்.V.செந்தில்குமார் மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மாணவ-மாணவியர் சிறப்புற செய்து இருந்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக