இயற்கை விவசாயிகள் சார்பாக குடியாத் தம் பாரம்பரிய அரிசி திருவிழா ஏராள மான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 5 மே, 2025

இயற்கை விவசாயிகள் சார்பாக குடியாத் தம் பாரம்பரிய அரிசி திருவிழா ஏராள மான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு !

இயற்கை விவசாயிகள் சார்பாக குடியாத்தம் பாரம்பரிய அரிசி திருவிழா ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு !
 தோல் பாவை கூத்தை  ஆர்வமுடன் கண்டு களித்த பொதுமக்கள் 

குடியாத்தம் , மே 5 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் திருவள்ளு வர் பள்ளியில் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் தனியார் அமைப்பு சார்பாக குடியாத்தம் பாரம்பரிய அரிசி வகைகள் திருவிழா நடை பெற்றது இதில் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப் பினர் அமுலு விஜியன் நகர மன்றத் தலைவர் எஸ் சௌந்தர்ராஜன்
ஆகியோர் கலந்து கொண்டனர் இதில் பாரம்பரிய அரிசி வகைகள், பாரம்பரிய விதை நெல்கள், மரபு காய் கனி விதை கள்,சிறு தானியங்கள், மற்றும் ஆயுர்வேத சித்தா மருந்துகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன மேலும் காலை முதல் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது இதில் சிறுவர்கள் கலந்து கொண்ட சிலம்பு சுற்றுதல் மற்றும் பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள்  நடைபெற்றது மேலும் பாரம்பரிய அரிசி வகைகள் மற்றும் பாரம்பரிய உணவு வகைகள் குறித்த விழிப்புணர்வு தோல்பாவை கூத்து (பொம்மலாட்டம்)
நடைபெற்றது பொம்மலாட்டம் இந்த காலகட்டத்தில் அரிதாக காணப்படும் இந்த தோல்பாவை கூத்தை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் கண்டு களித்தனர் விழா ஏற்பாடுகளை சிவசங்கரன் ஜெயக்குமார் கோபி செழி யன் டாக்டர் தில்லைவாணன் தமிழ்ச் செல்வன் ரகுராமன் விவேக் சதீஷ் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad