நாடகம் பார்ப்பது தவிர்த்த பெண்கள் திமுக சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் எம் எல் ஏ கலகலப்பு பேச்சு!
திருப்பத்தூர் ,மே 13 -
நாடகம் பார்ப்பது தவிர்த்து விட்டு பெண்கள் பெரிய தியாகம் செய்து செவ்வாத்தூரில் நடைபெறும் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர் என எம்எல்ஏ கலகலப்பேச்சு
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கந்திலி மதிய ஒன்றியம் செவ்வத்தூர் பகுதியில் திமுக அரசின் நான்காண்டு சாதனை குறித்து விளக்கப் பொதுக்கூட்டம் திங்கட்கிழமையான இன்று இரவு 8 மணி அளவில் கந்திலி மதிய ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய எம்எல்ஏ ஆண்கள் குறிப்பிட்ட நேரம் கடந்த உடன் போகலாம் என்று கூறுவார்கள் ஆனால் பெண்கள் தற்போது 8 மணி ஆகியும் நாடகம் பார்ப் பது தவிர்த்துவிட்டு சாதனை விளக்கக் கூட்டத்தில் அமர்ந்து நான் பேசும் பேச்சை கேட்டு வருகின்றனர் இதுவே பெரிய சாத னை என கலகலப்பாக பேசினார். மேலும் திமுக அரசு இந்த நான்கு ஆண்டுகளில் செய்த பல்வேறு நலத்திட்டங்கள் குறித் தும் எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் தலைமை கழக பேச்சாளர் பாலமுருகன் கலந்துகொண்டு பேசினார் மேலும் இதில் மாவட்ட துணை செயலாளர் மோகன் மற்றும் சம்பத்,திருப்பத்தூர் நகர செயலாளர் ராஜேந்திரன் பொதுக்குழு உறுப்பினர்கள் ரகுநாத், அரசு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல் கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன் ராஜ், கந்திலி ஒன்றிய சேர்மன் திருமதி திருமுருகன், கந்திலி மத்திய ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பிரபாகரன் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர் கள் என பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக