பெண்ணுக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது
தூத்துக்குடியில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து ஆபாச வீடியோ எடுத்து பெண்ணை மிரட்டிய வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடியை சேர்ந்த 31 வயது பெண் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மனு அளித்தார். அதில், தூத்துக்குடி அண்ணா நகர் 9வது தெருவை சேர்ந்த பாலு மகன் அஜித் குமார் (28) என்பவர் தன்னிடம் நண்பராக பழகினார். கடந்த ஆண்டு பிறந்தநாள் விழா என்று கூறி அழைத்து சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளார்.
அதனை வீடியோ பதிவு செய்து சமூகவலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டினார். அதன்பிறகு அவ்வப்போது பணம் கேட்டு மிரட்டினார். இதுவரை சுமார் ரூ.10 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 6 பவுன் நகையை பறித்துக் கொண்டார். தொடர்ந்து அடித்து மிரட்டி வருகிறார். கடந்த வாரம் எனது தந்தையை தாக்கியதாக புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் அஜித் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.. மேலும் அவரது உறவினர்கள் 2 பேரை தேடி வருகின்றனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக