மானாமதுரையில் சிந்தூர் ஆப்பரேஷன் வெற்றியடுத்து 'மூவர்ணக் கொடி வெற்றிப்பேரணி' நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகில் சமீபத்தில் பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக நடைபெற்ற முப்படைகளின் 'சிந்தூர் ஆப்பரேஷன்' வெற்றியை கொண்டாடும் விதமாக, மானாமதுரை நகர் பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் மூவர்ணக் கொடியை கையில் ஏந்தி "மூவர்ணக் கொடி வெற்றிப்பேரணி" மேற்கொண்டு சிந்தூர் வெற்றியை கொண்டாடினர். மேலும் இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கும், இந்திய திருநாட்டின் முப்படை தளபதிகள் மற்றும் ராணுவ வீரர்களின் வெற்றியை மகிழ்விக்கும் விதமாக தங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மானாமதுரை நகர் பாஜக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக