ஆப்ரேஷன் செந்தூர் வெற்றியை ராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் மூவண்ண கொடியை ஏந்தி மாபெரும் யாத்திரை!
ராணிப்பேட்டை , மே 25 -
ராணிப்பேட்டை மாவட்டம் ஆப்ரேஷன் செந்தூர் வெற்றியை ராணுவ வீரர் களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும்
மூவண்ண கொடியை ஏந்தி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் ராணிப் பேட்டை சட்டமன்றத்தின் சார்பாக வாலாஜாபேட்டை நகரில் மாவட்டத் தலைவர் நெமிலி பி ஆனந்தன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் சிவமணி முன்னிலையில் , முன்னாள் தேசிய செயற்குழு உறுப்பினர் தணி காசலம் ஜி , நகர மன்ற உறுப்பினர் என்டி சீனிவாசன், ஜி சங்கர் மாவட்டச் செயலா ளர் முன்னிலையிலும் நிகழ்ச்சி ஏற்பாடு கள் ஜெயக்குமார் வாலாஜா நகர தலை வர், ஜெகதீஸ்வரன் வாலாஜா கிழக்கு ஒன்றிய தலைவர், கோதண்டராமன் வாலாஜா மேற்கு ஒன்றிய தலைவர், தீபா ராணிப்பேட்டை நகர தலைவர், மணி கண்டன் ஆற்காடு மேற்கு ஒன்றிய தலை வர், நாகராஜ் விசார நகர தலைவர் ஆகியோரின் ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்றது, விழாவில் முன்னாள் ராணுவத்தினர் பெரும் திரளானோர் கலந்து சிறப்பித்தனர்.
தமிழக குரல் சிறப்பு செய்தியாளர் சிவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக