உதகை காந்தல் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மூவுலக ரசி அம்மன் ஆலயத்தில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வந்தது இன்று நான்காம் தேதி அம்மன் திருத்தேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது இன்று காலை அம்மனுக்கு சிறப்பு யாகங்களும் அபிஷேகமும் நடைபெற்றது மதியம் அன்னதானம் நடைபெற்றது இன்று மாலை 7 மணி அளவில் அம்மன் திருவீதி உலாவுக்கான வடம்பிடித்த நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்று சென்றனர்
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக