எடப்பாடியாரின் தேர்தல் வியூகத்தை கண்டு ஸ்டாலினுக்கு ஜன்னி காய்ச்சல் வந்து விட்டது
கருணாநிதி இருந்திருந்தால் ஸ்டாலின் சாதனை,உழைப்பு என்று சொல்லியிருக்க மாட்டார் என் பெயரை கெடுக்க வந்தவர் என்று சொல்லி இருப்பார்
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்
தலைவர் ஆர்.பி உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளது
நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் நூற்றாண்டு கண்டிருக்கின்ற சட்டப்பேரவையிலே ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ஜனநாயகத்தை காலிலே போட்டு மிதித்து, ஜனநாயகத்தின் குரல் வழியை நெறித்து ஒரு ஜனநாயக படுகொலை செய்திருக்கிறது என்பதை தமிழக மக்கள் நன்றாக அறிவார்கள்.
புரட்சித்தமிழர் வருங்கால முதலமைச்சராக எடப்பாடியார் சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னையை பற்றி விவாதிக்க வேண்டும் என்று, அவசர பொது முக்கியத்துவம் பேரவை 55 படி பேச அனுமதி கேட்டால் அனுமதி மறுக்கப்படுகிறது,
பிறகு சட்டமன்றத்திலே போராடி அந்த வாய்ப்பை பெற்று எடப்பாடியார் பேசும் போது நேரலை துண்டிக்கப்படுகிறது, அந்த நேரலை துண்டித்தாலும் பரவாயில்லை மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்கிற அந்த மக்கள் மீதுள்ள அக்கறையோடு, எடப்பாடியார் வைக்கின்ற அந்த விவாதத்திற்கு பதில் சொல்ல முடியாமல் ஸ்டாலின் திக்கு திணறி, திண்டாடி, குளிர்காய்ச்சல் வந்து நடுக்கம் ஏற்பட்டதை சட்டசபையில் பார்க்க முடிந்தது, அவரிடத்திலே எப்போதும் பதில் இருப்பதில்லை.
அதனால் பேரவை தலைவர் ரெடிமேட் தீர்ப்பை தயாராக வைத்திருப்பார் என்று எங்களுக்கு தண்டனை கொடுத்து எங்களை தூக்கி வெளியே போடச் சொல்லுவார்.பேரவை தலைவர் அவர்களே, மக்கள் திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு தண்டனை கொடுப்பதற்கு தயாராகி விட்டார்கள் அதை நீங்கள் முட்டுக் கொடுத்தாலும் அதை தடுக்க முடியாது.இன்றைக்கு திமுக அரசின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் இதை மறைப்பதற்காக சட்டமன்றத்திலே பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக தீர்மானம் நிறைவேற்றுவது, குழுபோடுவது, 110 அறிக்கை விட்டு பாராட்டு விழா நடத்துவது தான் சட்டமன்றத்தினுடைய அன்றாட நிகழ்வு ,ஒட்டுமொத்தத்தில் வரலாற்று சிறப்புமிக்க தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஜனநாயகத்தை இன்றைக்கு கேள்விக்குறியாக்கியுள்ளது.
இன்றைக்கு ஸ்டாலினுக்கு குளிர் காய்ச்சல் வந்திருக்கிறது, தமிழகத்தில் மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி மலர ராஜதந்திரத்துடன் எடப்பாடியார் கூட்டணி அமைத்துள்ளார். இதைக் கண்டு ஸ்டாலின் நடுநடுங்கி போய் உள்ளார் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் அவர் சட்டமன்றத்திற்கு வந்தாலும் சரி ,அவர்களுடைய கட்சி கூட்டத்திற்கு சென்றாலும் சரி, அரசு விழாவுக்கு சென்றாலும் சரி, எங்கே சென்றாலும் அவர் உறக்கத்திலும் அவருடைய நடவடிக்கைகளும், உச்சரிக்கப்படுகிற ஒரே வார்த்தை எடப்பாடியாரை தான். இன்றைக்கு மக்கள் செல்வாக்கில் இமயத்திற்கு எடப்பாடியார் உயர்ந்துள்ளதை கண்டு ஸ்டாலின் நடுநடுங்கி பேசி பெறுகிறார்.
எடப்பாடியார் பாஜகவுடன் வெற்றி கூட்டணி அமைதி கண்டு ஒரு நாளாந்தர விமர்சனத்தை தொடர்ந்து ஸ்டாலின் வைத்து வருகிறார்.
சட்டமன்றத்தில் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியாரை பார்த்து, நீங்கள் ஏன் கூட்டணி வைத்தீர்கள் என்று கேட்கிறார் என்று சொன்னால் எவ்வளவு சிறுபிள்ளைத்தனமான கேள்வியாக உள்ளது. ஒரு கட்சி யாரோடு கூட்டணி வைக்க வேண்டும் யாரோடு அந்த கூட்டணியிலே பயணம் செய்ய வேண்டும் என்று அந்த கட்சியினுடைய தொண்டர்கள் விருப்பத்தையும், மக்கள் விருப்பத்தையும் அடிப்படையாகக் கொண்டு வைப்பார்கள் தற்போது எடப்பாடியார் மக்களுக்கு பயனளிக்கின்ற, மக்களை பாதுகாக்கின்ற, மக்களுக்கு சேவை செய்கின்ற கூட்டணியாக இன்றைக்கு தனது ராஜதந்திரத்தாலே தேர்தல் வியூகத்தில் அவர் அமைத்திருப்பதை கண்டு ஸ்டாலினுக்கு இன்றைக்கு ஜன்னி காய்ச்சல் வந்திருக்கிறது.
சட்டமன்றத்தில் கேட்ட கேள்வியை கேட்கிறார்,பொதுக்கூட்ட மேடையிலே அவர் ஏன் கூட்டணி அமைத்தார்கள் என்று பேசுகிறார், திமுகவின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்திலே, அவருடைய மாவட்ட செயலாளர்களுக்கு எல்லாம் ஒரு தைரியத்தையும், நடுக்கத்தை போகின்ற வகையிலே ஒரு அவதூறு செய்தியை பேசியிருக்கின்றார்.
சட்டமன்றத்திலேயே எனது தந்தையார் கருணாநிதி இருந்திருந்தால் ஸ்டாலின் என்றால் உழைப்பு உழைப்பு உழைப்பு என்று சொல்வார்,எனது தந்தையார் கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால் ஸ்டாலின் என்றால் சாதனை சாதனை என்று சொல்லி இருப்பார் என்று அவர் தனக்குத்தானே பாராட்டு விழா சட்டமன்றத்தில் நடத்திக் கொண்டார் அதை பார்த்து சிரிப்பதா? அழுவதா? என்று தெரியவில்லை.
ஏனென்றால் ஒரு முதலமைச்சருக்கு மகனாக கட்சியிலே இளைஞரணி செயலாளர்,சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், துணை முதலமைச்சராகி மேயராகி இப்போது முதலமைச்சராக இருந்து மட்டுமல்லாமல் தன் மகனையும் தந்தை வழியில் முதலமைச்சராகுவதற்கு முதல் படியாக அமைச்சராக்கி, துணைமுதலமைச்சராக்கி இருக்கிறாரே இதுதான் சாதனையா?
குடும்ப வாரிசு அரசியலில் இருந்து தமிழகத்தை மீட்டெடுப்பதற்காக எடப்பாடியார் போராடிவருகிறார். எடப்பாடியார் ஒரு விவசாயின் மகனாக பிறந்து 50 ஆண்டு காலம் மக்களுக்கு சேவையாற்றி, சட்டமன்ற உறுப்பினர், வாரிய தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சர் என மக்கள் செல்வாக்கால் இன்றைக்கு 8 கோடி தமிழர்கள் மனதில் தனது சேவையால், கருணையால் இன்றைக்கு நிலைத்து நிற்கின்றார் இதுதான் சாதனை.
நீங்கள் செய்திருப்பது சாதனை அல்ல, தமிழ்நாட்டுக்கு கொடுத்திருக்கிற வேதனை, ஆகவே கருணாநிதி இருந்திருந்தால் ஸ்டாலினை சாதனை என்று சொல்லி இருக்க மாட்டார் என் பெயரை கெடுக்க பிறந்தவர் என்று தான் சொல்லி இருப்பாரோ என்று தான் தமிழ்நாட்டு மக்கள் இன்றைக்கு நினைக்கிறார்.
ஆகவே கருணாநிதியின் மகனாக பிறந்ததால் தான் உங்களுக்கு இத்தனை அங்கீகாரமே,மக்கள் இடத்திலே திணிக்கப்பட்ட தலைவர் நீங்கள், இன்றைக்கு காலத்தால் கண்டெடுக்கப்பட்ட மக்களால் போற்றப்படக்கூடிய வரவேற்க கூடிய ஒரே தலைவர் எடப்பாடியார் தான்.
இன்றைக்கு எடப்பாடியார் மீது தனிநபர் விமர்சனத்தை நீங்கள் செய்து வந்து இதன் மூலம் முதலமைச்சர் இலக்கணத்தை நீங்கள் இழந்து விட்டீர்கள், இன்றைக்கு தமிழகத்தின் நிலையை மாற்ற அற்புதமான கூட்டணியை எடப்பாடியார் அமைந்தது கண்டு, மிரட்டி, உருட்டி,அடி பணந்து வைத்துள்ளார்கள் என முதலமைச்சர் பேச வேண்டிய பேச்சா இது?
இந்த நாட்டில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை பற்றி பேசி தீர்க்க வேண்டிய பிரச்சினைகளான சட்ட ஒழுங்கை பற்றி, பாலியல் பலாத்காரத்தை பற்றி பயப்படாத நீங்கள், சொத்து வரி, மின் கட்டண வரி இவற்றையெல்லாம் பற்றி
கவலைப்பட வேண்டிய நீங்கள் இன்றைக்கு எடப்பாடியார் எப்படி கூட்டணி அமைத்தார் என்று நீங்கள் ஆராய்ச்சி பண்ணி செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று சொன்னால் அது உங்கள் இடத்தில் ஒரு நிலநடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமிர்ஷாஜி,எடப்பாடியாரின் அன்பான அழைப்பை ஏற்று அவர் இல்லத்திற்கு வந்து அவரோடு அந்த இரவு உணவுகளை பங்கேற்றார்.
இன்னைக்கு தாய் தமிழ்நாட்டில் ஒரு குடும்ப வாரிசுஇருந்து, சர்வாதிகார ஆட்சியில் இருந்து, ஊழல் சாம்ராஜ்ய அரசியலில் இருந்து, இந்த மக்களை மீட்டெடுப்பதற்கு எடப்பாடியாரின் தலைமையிலே, இன்றைக்கு தேசிய கட்சிகள் எல்லாம் ,திமுகவுக்கு எதிராக இருக்கிற எதிரணியில் இருக்கிற அனைத்து கட்சிகளும், நியாயமான, உறுதியான மனம் படைத்த, கம்பீரமிக்க தலைவராக போராட்ட குணம் உள்ள தலைவராக எடப்பாடியார் எடுத்த முடிவில் உறுதியாக நிற்கிற தலைவராக உள்ளார் இதைக் கண்டு ஸ்டாலின் நடுங்கிப் போய் உள்ளார்.
எடப்பாடியார் மக்கள் விரும்பும் கூட்டணி அமைத்துள்ளார் இன்றைக்கு எடப்பாடியாரை பற்றி ஸ்டாலின் பேசும் அவதூறு, தனிநபர் விமர்சனம் எல்லாம் எந்த சேதாரம் ஏற்படாது. மக்கள் உங்களை நம்ப தயாராக இல்லை 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி யார் தான் என மக்கள் தீர்மானித்து விட்டனர் என கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக