காதல் விவகாரத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் விசாரணை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 28 மே, 2025

காதல் விவகாரத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் விசாரணை!


காதல் விவகாரத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் விசாரணை!


ராணிப்பேட்டை ,மே 28 -

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே காதல் விவகாரத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவத் தில் பிளஸ் -1மாணவியும் காயம் அடைந் தார்.ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங் கர் அருகே உள்ள புலிவலம் ஊராட்சிக் குட்பட்ட வாரச்சந்தை பின்புறம் பகுதியை சேர்ந்தவர் ஜனனி பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு வரும் கல்வி ஆண்டில் பிளஸ்-1 ஒன் செல்ல விருந்தார். சென்னை அன்னனூரை சேர்ந்தவர் லட்சியா. இவர் பிளஸ்-1 முடித்துவிட்டு வரும் கல்வி ஆண்டில் பிளஸ் டூ செல்ல உள்ளார். இவர் தனது மாமா வீடான  புலிவலம் கிராமத்திற்கு வந்திருந்தார்.  இந்நிலையில் இன்று மாலை வீட்டில் இருந்த ஜனனியை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்தார்.  இந்த சம்பவத்தை தடுக்க சென்ற பிளஸ் -1 மாணவியான இலட்சியா என்பவரும் காயம் அடைந்தார். காயமடைந்த லட்சியா வை உறவினர்கள் மீட்டு சோளிங்கர்  அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் . பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 கொண்டபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் காதல் விவகாரத்தில் திருவள்ளூர் மாவட்டம் கே ஜி கண்டிகையை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஜனனியை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது.
 இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad