சாலையின் குறு்கே விழுந்த மரம்; போக்குவரத்து பாதிப்பு.
நீலகிரி மாவட்டம் பிங்கர்போஸ்ட்ல் இருந்து எமரால்ட் ஹைட்ஸ் காலேஜ் வழியாக எச்.பி.எப் செல்லும் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது...
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இன்று மற்றும் நாளை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையாலும், காற்றின் வேகத்தாலும் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்த வண்ணம் உள்ளன... இந்நிலையில் உதகை பிங்கர்போஸ்ட் - எச்.பி.எப் சாலையில் மரம் மின்சார கம்பிகள் மீது விழுந்ததில் மின்கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்தது. மரம் சாலையின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது ...
தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் கார்முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக