உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு தடை
நீலகிரி மாவட்டத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு அபாயம் உள்ளதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவிப்பு.
அபாயகரமான பாறைகள் அகற்றும் வரை கனரக வாகனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த சாலையில் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அரசுப் பேருந்துகள் பகல் நேரங்களில் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக