ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை வடக்கு பாளையத்தில் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் பெரும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த பாளையங்கோட்டை வடக்கு பாளையம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது இந்த கும்பாபிஷேகமானது மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் சித்தயோக துவிதியை கூடிய சுப தினத்தில் வைகாசி மாதம் 27 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஸ்ரீ கணபதி பூஜை வாஸ்து பூஜை தொடங்கி இரவு 7 மணிக்கு முற்கால யாகசாலை பூஜை ஆரம்பிக்கப்பட்டன இரவு 9 மணிக்கு பூர்ணாஷூதி மகா தீபாரணை நடைபெற்றது புதன்கிழமை காலை சுமார் 7 மணி அளவில் இரண்டாம் கால பூஜை யாக கால பூஜை ஆரம்பிக்கப்பட்டு காலை 9 மணி அளவில் ஹோமம் நடைபெற்றது இதனை அடுத்து சுமார் 9:45 மணி அளவில் கலச புறப்பாடு நடைபெற்று விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டன இதில் உள்ளூர் நாட்டாமைகள் திருப்பணி குழுக்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்
ஸ்ரீமுஷ்ணம் தாலுக்கா நிருபர் V.கார்த்திக்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக