பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இவர்களிடமிருந்து பெறப்படும் புகார் மனுக்கள் கள ஆய்வு! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 28 மே, 2025

பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இவர்களிடமிருந்து பெறப்படும் புகார் மனுக்கள் கள ஆய்வு! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இவர்களிடமிருந்து பெறப்படும் புகார் மனுக்கள் கள ஆய்வு! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! 

திருப்பத்தூர் ,மே‌ 28 -

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி யில் இயங்கி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சுற்றுச்சூழல் தொடர்பாக, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர் களிடமிருந்து பெறப்படும் புகார்களின் அடிப்படையில் கள ஆய்வு மேற்கொண்டு, விதிமுறைகளை மீறும் தொழிற் சாலை கள் கண்டறியப்பட்டால் அதன் மீது மூடுதல் உத்தரவு மற்றும் மின் இணைப்பு துண்டித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.இதன் தொடர்ச்சி யாக தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில் மேற்கண்ட புகார்களின் உண்மை தண்மையின் அடிப்படையில், புகார் பெறப்பட்ட 30 நாட்களுக்குள் தவறி ழைக்கும் தொழிற்சாலைகளின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது புகார் மனு வினை மாவட்ட அளவிலான ஒருங்கி ணைப்பு குழுவின் சார்பாக வாணியம் பாடியில் இயங்கி வரும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், பிளாட் நெ.பிபி2, சிட்கோ தொழிற்வளாகம், வாணியம்பாடி அலுவலகத்தில்  சமர்ப்பித்து பயன் பெறலாம் மற்றும் email id: deevbd@ tnpcb.gov.in வாயிலாகவும் புகார்களை தெரிவிக்கலாம் எனவும்  மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி,இ.ஆ.ப., அவர்கள்   தெரிவித்துள்ளார்.

 செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad