சொந்தத் தொகுதியில் சட்டமன்ற உறுப் பினர் பெயரை தவிர்த்ததால் பிரச்சனை! நிகழ்ச்சியை நிராகரித்த எம் எல் ஏ ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 27 மே, 2025

சொந்தத் தொகுதியில் சட்டமன்ற உறுப் பினர் பெயரை தவிர்த்ததால் பிரச்சனை! நிகழ்ச்சியை நிராகரித்த எம் எல் ஏ !

சொந்தத் தொகுதியில் சட்டமன்ற உறுப் பினர் பெயரை தவிர்த்ததால் பிரச்சனை! நிகழ்ச்சியை நிராகரித்து எம் எல் ஏ !
குடியாத்தம் , மே 27 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்ட சமுத்திரம் ஊராட்சியில் சிறிய அளவில் கைத்தறி பூங்கா திறப்பு விழா அமைச்சர் காந்தி மற்றும் துரைமுருகன் பங்கேற்கும் நிலையில் தனது பெயரை கல்வெட்டில் போடவில்லை என கூறி கே வி குப்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகன் மூர்த்தி நிகழ்ச்சியை புறக்கணித்து சென்றார்
உடனடியாக சட்டமன்ற உறுப்பினர் பெயரை கல்வெட்டில் ஸ்டிக்கர் ஒட்டிய அதிகாரிகள் இந்நிலையில் நிகழ்ச்சி நடைபெற்ற கொண்ட சமுத்திரம் ஊராட்சி கே வி குப்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி எனவும் மேலும் கைத்தறி பூங்கா திறப்பு விழா கல்வெட்டில் தொகுதி எம்எல்ஏவான புரட்சி பாரத கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தியார் அவர் களின் பெயர் பதிவு செய்யவில்லை
ஆகவே நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே புறக்கணித்து ஜெகன்மூர்த்தி சென்று விட்டார் அப்போது அந்த நிகழ்ச்சி க்கு வந்த வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி அவர்களிடம் எம் எல் ஏ ஜெகன் மூர்த்தியார் தனதுபெயரை கல்வெட்டில் புறக்கணித்து குறித்து கூறினார்இதை எடுத்து இதை குறித்து விசாரணை மேற்கொள்வதாக மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி தெரிவித் தார் மேலும் புரட்சி பாரத கட்சி நிர்வாகி கள் கே வி குப்பம் தொகுதியான எம்எல் ஏவி ன் பெயரை அவரது சொந்த தொகுதி யிலேயே பெயர் போடாமல் புறக்கணிப் பதாக கூறி அதிகாரியிடம் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர இதனையடுத்து உடனடியாக கல்வெட்டில் தற்காலிகமாக கேவி குப்பம் எம் எல் ஏ ஜெகன் மூர்த்தியார் பெயரை ஸ்டிக்கர் ஒட்டப் பட்டது நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே நிகழ்ச்சியை புறக்கணித்து ஜெகன் மூர்த்தி சென்று விட்டார் இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad