வேலூர் ,மே 27 -
வேலூர் மாவட்டம் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த தஸ்தகிரி என்கிற பகுதியில் , மறைந்த K வெங்கடேஸ்வரலு என்பவரின் மனைவி, காஞ்சர்ல பத்மா வசித்து வந்தார் . இவருக்கு (வயது 58 ) கடந்த ஞாயிற்று கிழமை, சித்தூர் அருகே பலமனேர் பகுதியில் சாலை ஓரமாய் நடந்து சென்று கொண்டிருந்த போது, ஆட்டோ ஒன்று அவர் மேல் மோதி விபத்துக்குள்ளானார். நேற்று காலை அவர்களை CMC மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று 26 ஆம் தேதி மாலை இவர் மூளை சாவு அடைந்தார். இதனை தொடர்ந்து, இவரது ஒரே மகள் M க்ரிஷ்ணப்ரியா மற்றும் உறவினர் இவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இவருடைய இதயம் மற்றும் நுரையீரல் MGM சென்னைக்கும், கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் CMC மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் MIOT மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக