இத்தலார் நெடுஞ்சாலையில் மண் சரிவு
நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து மஞ்சுர் செல்லும் நெடுஞ்சாலையில் இத்தலார் எனும் பகுதியில் பெய்து வரும் கனமழையினால் மண் சரிவு ஏற்பட்டுள்ளது இதனை ஜேசிபி இயந்திரம் மூலம் சுத்தப்படுத்தி வருகின்றனர் மண்சரிவு ஏற்பட்டது தெரிந்தவுடன் உடனடியாக நெடுஞ்சாலைத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விரைவாக சுத்தம் செய்ய ஆரம்பித்து விட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தவிர்க்க முடிந்தது. இந்த மண் சரிவானதே தற்பொழுது நீலகிரி மாவட்டத்தில் பிரபலமாக இருக்கும் பசுமை புல் வேலி அமைத்தல் என்னும் திட்டமாகும் இந்தத் திட்டம் நிறைய இடங்களில் அமல்படுத்தி வருகின்றன அதில் இத்தலாரும் ஒரு பகுதியாகும் பெய்த கனமழையினால் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக