தண்ணீர் குளமாக மாறிய விவசாய தோட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 மே, 2025

தண்ணீர் குளமாக மாறிய விவசாய தோட்டம்

 


தண்ணீர் குளமாக மாறிய விவசாய தோட்டம் 


நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 25 மற்றும் 26 இரண்டு தினங்கள் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்த நிலையில் கொட்டி தீர்க்கும் கனமழையும் பலத்த காற்றும் வீசி வருகிறது இந்நிலையில் பயிரிடப்பட்ட விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி குளமாக காட்சியளிக்கின்றது. இந்த மழையினால் இயல்பு வாழ்க்கையும் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளது பயிரிடப்பட்ட அனைத்து பயிர்களும் மழை நீரால் மூழ்கி அழுகிய நிலையில் உள்ளது இதனால் விவசாயிகள் அனைவரும் கவலைக்கிடமாக இருக்கின்றனர். இந்த மழையானது தொடர்ந்து பெய்யும் நிலையில் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என கூறுகிறார்கள். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad