தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அவதி,உடனடி தீர்வு கிடைக்குமா??? - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 13 மே, 2025

தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அவதி,உடனடி தீர்வு கிடைக்குமா???


 தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அவதி,உடனடி தீர்வு கிடைக்குமா???


கூடலூர் தாலுகா நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட தேவாலா ஹோலி கிராஸ் பள்ளி சாலையில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்தத் தெரு நாய்கள் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பின் தொடர்வதும், வாகனங்களை துரத்துவதும் வீட்டுவாசல்களில் உள்ள காலணிகளை கடித்து எடுத்துச் செல்வதுமாக இருந்து வருகிறது.இது சம்பந்தமாக பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்யப்பட்டுள்ளது என்றும் ஆனால் இதற்கு இதுவரை தீர்வு காணவில்லை என்றும் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌஷாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad