ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிளாக்ஸ் பேனர்களை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றினர். ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உரிய அனுமதியின்றி பல்வேறு பிளாக்ஸ் பேனர்கள் மற்றும் அரசியல் கட்சி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இதனால் வாகன ஓட்டிகள் கவனம் சிதறி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைமேடைகள், நடைபாதைகள், சாலையோரங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிளாக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டும் என மாநகராட்சி துணை ஆணையர் தனலட்சுமி உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அனைத்து வகையான பிளாக்ஸ் பேனர்களை நேற்று மாநகராட்சி பணியாளர்கள் அகற்றினர்.
மேலும், மாநகராட்சி அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை ஆணையர் தனலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர்
ம. சந்தானம்
ஈரோடு


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக