தமிழ்நாடு அரசு நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் மற்றும் அம்ருத் மித்ரா திட்டத்தின் கீழ், ஈரோடு மாநகராட்சியில் உள்ள 21 பூங்காக்களைப் பராமரிக்கும் மகளிர் சுயஉதவிக் குழுப் பணியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மேயர் நாகரத்தினம் தலைமை வகித்தார்.
துணைமேயர் செல்வராஜ், துணைஆணையர் தனலட்சுமி, பொறியாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் இனிவரும் காலங்களில் மரம் நடுதல் மற்றும் நடுகின்ற மரங்களைப் பராமரித்தல் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, பூங்காப் பணியாளர்களுக்கு சீருடை, கைப்பை, தண்ணீர்க் குடுவை, கையேடு மற்றும் எழுதுகோலை மேயர் நாகரத்தினம் வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக