அன்னைசத்யாநகர் மக்கள் அடுக்குமாடி குடியிருப்புக்கு எதிர்ப்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 14 மே, 2025

அன்னைசத்யாநகர் மக்கள் அடுக்குமாடி குடியிருப்புக்கு எதிர்ப்பு


ஈரோடு-பவானி சாலையில் அமைந்துள்ள அன்னை சத்யா நகரில் குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் 228 குடும்பங்கள் வசித்து வந்தனர்.

அண்மையில் அக்குடியிருப்பு பழுதடைந்ததால் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் இடித்து அதே பயனாளிகளுக்கு வீடு வழங்கப்படும்

என அதிகாரிகள் கூறியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


தற்போது 330 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு புதிதாக கட்டப்பட்டுள்ள நிலையில் குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும் என அதிகாரிகள் கூறியதற்கு அன்னை சத்யா பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர், அமைச்சர், முதல்வர் தனிப்பிரிவு என பலருக்கும் மனு அனுப்பியும் எந்தவித பதிலும் வரவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். வீட்டின் எண் மாற்றப்படும் போது அதன் மூலம் அனைத்து சான்றிதழ்களையும் மாற்ற வேண்டிய சூழல் உள்ளது.


எனவே குலுக்கல் முறையை கைவிட்டு பழைய பயனாளிகளுக்கு அதே எண் வீட்டை ஒதுக்க வலியுறுத்தி இன்று நடந்த குலுக்கல் முறையை புறக்கணித்த 30-க்கும் மேற்பட்டவர்கள் ஈரோடு-பவானி சாலையில் மறியலில் ஈடுபட முயற்சித்தனர். தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் ம.சந்தானம், ஈரோடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad