தாராபுரத்தில் பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 14 மே, 2025

தாராபுரத்தில் பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை வட்டார்போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளி வாகனங்கள்  கூட்டாய்வு  நடைபெற்றது.  தாராபுரம் அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆர்.டி.ஓ ஃபெலி்க்ஸ் ராஜா தலைமை தாங்கினார் .வட்டார போக்குவரத்து அலுவலர் பழனியப்பன்  முன்னிலை வகித்தார். ஆய்வில் தாராபுரம் வட்டாரத்தை சேர்ந்த 23 பள்ளிகளில் உள்ள 262 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் வாகனங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் ,தீயணைப்பு கருவிகள், வாகன கட்டுப்பாட்டு கருவி,அவசரகால வழி, முதலுதவி சிகிச்சை பெட்டி உள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டது. மேலும் வாகனங்களை இயக்கியும், பார்வையிட்டும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் வாகன சட்ட திட்டங்களுக்கு உட்படாத வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. தகுதியற்ற வாகனங்கள் மீண்டும் குறைகள் நீக்கப்பட்டு கொண்டுவரும் பட்சத்தில் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆய்வில் கலந்து கொண்ட தீயணைப்பு துறையினர் தீ தடுப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் குறித்து செய்முறை விளக்கம் அளித்தனர்.இது வாகன ஓட்டிகளுக்கு  மிகவும் பயனுள்ளதாக இருந்தது.இதில் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார்,ஆய்வாளர் விஜய சாரதி, மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார், போக்குவரத்து டிராபிக் இன்ஸ்பெக்டர் சஜினி, சூப்பிரண்டு அமிர்தராஜ், தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா ஜெயசிம்மராவ் மற்றும் போக்குவரத்து துறை,வருவாய் துறை, காவல் துறை, தீயணைப்பு துறை, கல்வித்துறை அலுவலர்கள்,பள்ளி நிர்வாகிகள், வாகன ஓட்டுநர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad