தமிழ்நாடு அரசு - இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் - சென்னிமலை பெருந்துறை வட்டம் - ஈரோடு மாவட்டம் :
மூத்த தம்பதியருக்கு திருக்கோயில் சார்பில் சிறப்பு செய்தல், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களின் சட்டப்பேரவை அறிவிப்புகள் (2025-26) அறிவிப்பு எண் 28- ன் படி. மணிவிழா கண்ட 70 வயது பூர்த்தியடைந்து ஆன்மீக ஈடுபாடு உள்ள தம்பதியருக்கு திருக்கோயில் சார்பில் சிறப்பு செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தில் பங்கேற்க விருப்பம் உள்ள தம்பதியருக்கு திருக்கோயில் சார்பில் சிறப்பு செய்யப்பட உள்ளது மற்றும் திருக்கோயில்களில் இலவச திருமணம் நடத்துதல்,
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களின் சட்டப்பேரவை அறிவிப்புகள் (2025-26) அறிவிப்பு எண் 1- ன் படி ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும். வகையில் திருக்கோயில் மூலம் ரூ.70,000/- (4 கிராம் தங்கம் உட்பட ) திட்ட செலவில் திருமணம் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக