இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால் ரேசன் அரிசி ஏற்றி வந்த லாரி தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்து!
வாணியம்பாடி,மே.24-
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சான் றோர் குப்பம் பகுதி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து வாணியம்பாடி தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கிற்கு 30 டன் ரேசன் அரிசியுடன் லாரி சென்று கொண்டு இருந்தது.லாரியை ஒட்டுனர் தட்சிணாமூர்த்தி என்பவர் ஓட்டிசென்றார். அப்போது சாலையின் நடுவே இருசக்கர வாகனத்தில் கடக்க முயன்றவர் மீது மோ தாமல் இருக்க லாரியை இடது புறமாக திரும்பிய போது லாரி, டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததில் அருகே இருந்த நடைபாதை தின்பண்டம் கடை நடத்தி வந்த ஜமீல் பாஷா (வயது 50)என்பவர் மீது ரேசன் அரிசி மூட்டைகள் சரிந்து விழுந்து படுகாயம் அடைந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர போலீசார் அரிசி மூட்டைகளின் அடியில் சிக்கி இருந்த ஜமீல் பாஷாவை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பின்னர் நகர போலீசார் கிரேன் உதவி யுடன் ரேசன் அரிசி லாரியை மீட்டனர். இதனை தொடர்ந்து மாற்று லாரியில் ரேசன் அரிசி மூட்டைகள் ஏற்றி அனுப்பப் பட்டது.இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதனால் அப்பகுதி யில் சற்று பரபரப்பு காணப்பட்டது.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக