தமிழக குரல் செய்தி எதிரொலியின் காரணமாக மானாமதுரையில் சாலைகயில் 'சென்டர் லைன் மார்க்கிங் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 24 மே, 2025

தமிழக குரல் செய்தி எதிரொலியின் காரணமாக மானாமதுரையில் சாலைகயில் 'சென்டர் லைன் மார்க்கிங்

 


தமிழக குரல் செய்தி எதிரொலியின் காரணமாக மானாமதுரையில் சாலைகயில் 'சென்டர் லைன் மார்க்கிங்' வரையப்படும் பணி‌ நடைபெற்று வருகின்றது.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அண்ணாசிலை முதல் நகர் பகுதியில் உள்ள பிரதான சாலைகளான தேவர் சிலை, காந்தி சிலை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், உடைகுளம், தயாபுரம், வட்டாட்சியர் அலுவலகம், சிப்காட் ரயில்வே கேட் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தார் சாலை விரிவாக்க பணியானது நிறைவடைந்த நிலையில், 'சென்ட்ர் லைன் மார்க்கிங்' எனப்படும் சாலைகளின் நடுப்பகுதி மற்றும் இருபுறமும் எல்லைக் கோடுகள் வரையப்படாமல் இருந்து வருவதால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் ரோடு எது? வழி எது? என்று தெரியாமல் வாகனங்களை வாகன ஓட்டிகள் இயக்க திணறி வந்தனர். சாலையில் வேகத்தடை எங்கு உள்ளது என்பதற்கான முன்னெச்சரிக்கை பலகைகள் இல்லாததாலும், சாலையின் எல்லையை வரையறுக்கும் 'சோலார் ரிஃப்ளெக்டர்கள்' நிறுவப்படாததாலும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தற்போது சித்திரை திருவிழா நடைபெற்று வரும் நிலையில், விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையில் எல்லை கோடு வரையறுக்கப்படாததால் எதிரெதிர் திசையிலிருந்து சென்று வரும் வாகனங்களின் விளக்குகள் பலனளிக்காமல் சாலை விபத்து ஏற்படும் மிகவும் அபாயகரமான சூழல் நிலவி வந்த நிலையில் வந்த நிலையில் உடனடியாக தமிழக குரல் செய்தி வெளியிடப்பட்டது. தமிழக குரல் செய்தி எதிரொலியின் காரணமாக சாலை விரிவாக்கம் நடைபெற்ற அனைத்து சாலைகளிலும் சென்ட்ரல் லைன் மார்க்கிங் மற்றும் வேகத்தடைகளிலும் மார்க்கிங் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் சமூக நலன் கருதி உடனடியாக செய்தி வெளியிடப்பட்ட தமிழக குரல் செய்தியின் பணி சிறக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad