கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.ஸ்டாலின் முன்னெடுப்பான ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம்( ஒரு காவலர் இரண்டு CCTV) பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த திட்டத்திற்கு கன்னியாகுமரி மாவட்ட மக்களிடமிருந்து நல்ல ஒத்துழைப்பு காவல்துறைக்கு கிடைத்து வருகிறது.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றான அனைத்து கிராமங்களிலும் CCTV என்ற இலக்கை அடையும் வண்ணம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறார்.
இந்த திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 640 CCTV க்கள் பொதுமக்கள் உதவியுடன் பொருத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் வீட்டையும், கிராமத்தையும் பாதுகாப்பதற்கும், குற்றங்களை முன்கூட்டியே தடுப்பதற்கும், நடந்த குற்றங்களை கண்டறிவதற்கும் CCTV முக்கிய பங்காற்றுகிறது என்பதை புரிந்து கொண்டு ஒத்துழைப்பு அளித்து வருவதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அனைத்து கிராமங்களிலும் சிசிடிவி என்ற இலக்கு விரைவில் எட்டப்படும்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்,
என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக