மாரத்தான் போட்டியில் இலவச சேவை செய்த தாராபுரம் எம்.எம்.மருத்துவமனை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 14 மே, 2025

மாரத்தான் போட்டியில் இலவச சேவை செய்த தாராபுரம் எம்.எம்.மருத்துவமனை



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நேற்று முன்தினம் மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியில் 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு ஓடினர்.அவர்களுக்கு தாராபுரம் எம்.எம்.மருத்துவ குழுவினர் 10 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த அழுத்த பரிசோதனை செய்தனர்.மேலும் வீரர்கள் ஓடிக்கொண்டு இருந்த போது அவர்களுக்கு ஆம்புலன்ஸ் மூலமாக சென்று மருத்துவ உதவிகள் செய்தனர்.போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் அனைவருக்கும் சர்க்கரை கரைசல்,பழச்சாறு மற்றும் குடிநீர் வழங்கி உற்சாகப்படுத்தினர்.இதுபோன்று தாராபுரம் எம்.எம்.மருத்துவமனையின் மருத்துவ குழுவினர் ஏராளமான இலவச சேவைகள் மற்றும் மருத்து முகாம்களை நடத்தி வருகின்றனர். மேலும் அதற்கான பாராட்டு சான்றிதழ்களையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad