ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்திற்கு ஐ. எஸ். ஓ தரச்சான்று - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 3 மே, 2025

ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்திற்கு ஐ. எஸ். ஓ தரச்சான்று



ஈரோடு மாவட்டத்தில் டவுன் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் ஐ.எஸ்.ஓ தர கவுன்சில் குழுவினர் சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர். மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களிலும் ஆய்வு செய்யப்பட்டது.


போலீஸ் நிலையங்களை

சுகாதாரமாகவும், தூய்மையாகவும்

பராமரிப்பது, புகார் அளிக்க வரும்

பொதுமக்களை நடத்தும் விதம்,

அவர்களக்கான இருக்கை வசதி,

குடிநீர் வசதி, போலீசார் சீருடை

அணியும் விதம் போன்றவற்றை

ஆய்வு செய்து மதிப்பீடு செய்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் சிறந்த தரத்துடன்

இருப்பதாக ஈரோடு தாலுகா போலீஸ்

நிலையம் தேர்வு செய்யப்பட்டது.


ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்திற்கு ஐ.எஸ்.ஓ தரச் சான்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஐ.எஸ்.ஓ தர கவுன்சிலிங் இயக்குனர் கார்த்திகேயன் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதாவிடம் ஐ.எஸ்.ஓ தரச் சான்று மற்றும் பணியிட மதிப்பீட்டிற்கான பாதுகாப்பு மற்றும் சுகாதார சான்றிதழை வழங்கினார்.


டவுன் டி.எஸ்.பி முத்துக்குமரன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் உள்பட பல அதிகாரிகள் உடன் இருந்தனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad