வேலூர் மத்திய சிறையிலிருந்து விடுதலையாக உள்ள சிறைவாசிகளுக்கு உடல், மன, சமூக நல பயிற்சி !
வேலூர் ,மே 02 -
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு சிறை மற்றும் சீர்திருத்த பணிகள் துறையுடன் தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கம் இணைந்து வேலூர் மத்திய சிறையிலிருந்து விடுதலையாக உள்ள சிறைவாசிகளுக்கு -உடல், மன, சமூக நல பயிற்சி ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனை விதிக்கப் பட்ட கைதிகளின் மறுவாழ்வு மற்றும் சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைப் பதற்காக விடுதலை செய்வதற்கு முந்தைய திட்டத்தின் கீழ் இன்று வேலூர் மத்திய சிறை வளாகத்தில் இவ்வாண்டில் விடுதலையாகும் சிறைவாசிகளுக்கான உடல்,மன, சமூக நல பயிற்சி அளிக்கப் பட்டது.தமிழ்நாடு அரசின் சிறைகள் மற்றும் சீர்திருத்த சேவைகள் துறையின் கீழ் இயங்கும் வேலூர் மத்திய சிறையும், தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கம் இணைந்து சிறையிலி ருந்து இவ்வாண்டில் விடுதலையாகும் சிறைவாசிகள் 26 பேருக்கு மன நலம், உடல் நலம் மற்றும் சமூக நலம் குறித்தும் ஆர்வம் உள்ள தொழில்கள் குறித்தும் அளிக்கப்பட்டது.சிறை கண்காணிப் பாளர் பி.தர்மராஜ் தலைமை வகித்து பேசினார். விடுதலையாக உள்ள சிறைவாசிகளுக்கு தையல், மின்னியல், உள்ளிட்ட தலைப்பில் பயிற்சிகள் வழங்குதல் சார்பாக தமிழ்நாடுமுன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் பேசினார்.
முன்னாள் சிறைவாசிகளுக்கு அளிக்கப்படும் உதவிகள் குறித்து எவ்வாறு உதவிகள் பெறுவது குறித்தும் பொருளாளர் இரா.சீனிவாசன் பேசினர்.
சிறை மருத்துவ அலுவலர் டாக்டர்.சதீஷ் மனநல அலுவலர் பாரதி ஆகியோர் உடல் நலம் குறித்தும் மன நலம் குறித்தும் பேசினர். இந்த பயிற்சியில் 26 சிறை வாசிகள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். சிறை அலுவலர் (பொ) பி.மகாராஜன், சிறை அலுவலர் பயிற்சி எஸ்.ரத்தின குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் சிறை நல அலுவலர் ஆர்.மோகன் நன்றி கூறினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக