துடியாய் துடிக்கும் பெற்றோர்: இனி ஒரு விபத்து வேண்டாம் துயர் துடைக்க நினைக்கும் எஸ்.பி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 25 மே, 2025

துடியாய் துடிக்கும் பெற்றோர்: இனி ஒரு விபத்து வேண்டாம் துயர் துடைக்க நினைக்கும் எஸ்.பி

துடியாய் துடிக்கும் பெற்றோர்: இனி ஒரு விபத்து வேண்டாம் துயர் துடைக்க நினைக்கும் 
எஸ்.பி 

 குமரி மாவட்டம் புத்தேரி அருகில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது இருசக்கர வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில்
சதீஸ் வயது (21) சங்கர் வயது( 20) இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து சில சமூக ஆர்வலர்கள் தெரிவித்ததாவது:இன்று அதிகாலை 2:30 மணி அளவில் புத்தேரி பகுதியில் நடந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது காரணம் இந்த இளைஞர்கள் இரவு வேளையில் பணிக்கு சென்று விட்டு திரும்பவில்லை, 

அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்லவும் இல்லை, மாறாக இரவு நேரத்தில் பொழுதுபோக்குக்காக இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று டீக்கடைகளில் அமர்ந்து அரட்டை அடித்து விட்டு சாலையில் கண்மூடித்தனமான வேகத்தில் வந்ததால் விபத்து நடந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்ட ஸ்டாலின் பொதுமக்களின் தேவை அறிந்து பல்வேறு விதமான காவல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவருடைய நடவடிக்கையில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுவது சாலை விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.

இரு தினங்களுக்கு முன்பு கூட விபத்தில்லா குமரி என்ற தலைப்பில் ரீல்ஸ் மூலம் விழிப்புணர்வு குறும்பட போட்டி நடத்தி சிறந்த விழிப்புணர்வுக்கு குறும்படத்திற்கு பரிசும் வழங்கினார்.
இவரின் இத்தகைய விழிப்புணர்வு முயற்சிக்கு குமரி மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இவருடைய நடவடிக்கையால் கழிந்த வருடம் குமரி மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தை விட இவர் பொறுப்பேற்ற பிறகு சாலை விபத்து என்பது 60% குறைந்துள்ளது.
100% விபத்துல்லா குமரி மாவட்டத்தை உருவாக்குவதே அவருடைய முழு நோக்கமாகும்.
குமரி மாவட்டத்தில் மருத்துவர் ஸ்டாலின் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் இரவு 11 மணிக்கு மேல் டீக்கடைகள் இயங்க கூடாது என உத்தரவு பிறப்பித்தார். இவருடைய இந்த உத்தரவால் பல ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
ஆனால் அவருடைய நோக்கத்திற்கு தடையாக சிலர் தங்களுடைய கல்லாவை நிரப்பும் நோக்கில்
இரவு நேர டீக்கடைகள் இயங்க அனுமதிக்க வேண்டுமென நீதிமன்றங்களை நாடிய சம்பவமும் அரங்கேறியது. எஸ் பி ஸ்டாலினின் சிறந்த நோக்கத்திற்கு தடை ஏற்படுத்தியதன் விளைவு 
தற்சமயம் இரவு நேரங்களில் ஏற்படும் விபத்தால் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
இரவு நேரங்களில் இன்றைய
இளைய தலைமுறையினர் வேலைக்கு செல்லாமல், போதைப் பொருட்களுக்கு அடிமையாகி, புகை பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை வைப்பது போன்ற தீய பழக்க வழக்கங்களுக்கு தங்களை இழந்து வருகின்றனர். இந்த தீய பழக்கவழக்கங்களை அவர்களுடைய வீட்டில் இருந்து செய்ய முடியாது எனவே
இதற்காக அவர்கள் தேர்வு செய்த இடம் டீ கடை .தற்போது இளைஞர்களின் ஆதிக்கத்தால் 24 மணி நேரமும் டீக்கடைகள் செயல்பட தொடங்கியுள்ளது.எஸ் பி ஸ்டாலின் இரவு தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டாம் எனக் கூறியது நமக்காகவும், நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும், நம் வீட்டுப் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பிற்காகவும் மட்டுமே எனவே காவல்துறை அறிவுறுத்தலை சரியாக நாம் புரிந்து கொண்டு இரவு நேரங்களில் தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்த்தால் விபத்துக்கள் குறையும், குற்றங்கள் குறையும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து குமரியை விபத்துல்லா மாவட்டமாக உருவாக்கி தமிழ்நாட்டில் உள்ள மற்ற மாவட்டங்களுக்கு முன்மாதிரியாக திகழ்வோம் என தெரிவித்தனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்,
என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad