உதகை படகு இல்லம் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 25 மே, 2025

உதகை படகு இல்லம் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

 


உதகை படகு இல்லம் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு.         


நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்த வண்ணம் உள்ளது இன்று காலை படகு இல்லம் அருகில் ஒரு மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது உடனே உதவி வட்டாட்சியர் திரு அருண் சார் அவர்கள் தலைமையில் 30 பேர் கொண்ட மீட்பு படையினர் உடனடியாக படகு இளம் அருகில் வந்து வேரோடு சாய்ந்து கிடந்த மரத்தை அறுத்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சீர் செய்தனர் மற்றும் உதவி வட்டாட்சியர் அருண் சார் தலைமையில் மீட்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் 


நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad