அகர்வால் சாரி டபிள் டிரஸ்ட் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கம் இணைந்து நடத்திய மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச செயற்கை கைகள் மற்றும் கால்கள் அளவெடுக்கும் முகாம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 25 மே, 2025

அகர்வால் சாரி டபிள் டிரஸ்ட் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கம் இணைந்து நடத்திய மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச செயற்கை கைகள் மற்றும் கால்கள் அளவெடுக்கும் முகாம்.

கடந்த மாதம் திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சென்னை அகர்வால் சாரி டபிள் டிரஸ்ட் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கம் இணைந்து நடத்திய மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச செயற்கை கைகள் மற்றும் கால்கள் அளவெடுக்கும் முகாம் நடைபெற்றது 

இதில் கலந்து கொண்ட 60 பயனாளிகளுக்கும் இன்று திருச்செந்தூர் ராஜ் திருமண மஹாலில் வைத்து ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான செயற்கை கைகள் மற்றும் கால்கள் இலவசமாக வழங்கப்பட்டது இதில் DCW. மேலாளர் திரு சீனிவாசன் அவர்கள் தலைமை தாங்கினார் 

டாக்டர் ராக்கேஷ் பர்ன்ண்டோ, தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் மாநில தலைவர் ரெ.காமராஜ்நாடார் அவர்கள் முன்னிலையில் அகர்வால் டிரெஸ்ட் நிர்வாகிகள் சம்பத், சுபாஷ்,  ஜான் வில்லியம்ஸ் 

இஞ்சினியர் நாராயணன் வணிகர் சங்கத்தின் மண்டல தலைவர் VM.வேலாயுத பெருமாள்  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நஷீர், பார்த்தீபன் கணேசன், வணிகர் சங்கத்தின் மாநில துணை தலைவர், டாக்டர் சுரேஷ், முத்துக்குமார், பாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad