தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (மே 25) அதிகனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் தமிழ்நாடு - கேரளா எல்லைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (மே 25) அதிகனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்தமிழக கடலோரப்பகுதிகளின்
மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு
சுழற்சி நிலவுகிறது. இதன்
காரணமாக தமிழ்நாட்டில் இன்று
(மே 25) சென்னை, விழுப்புரம்,
கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர்,
ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி,
தர்மபுரி, கடலூர் திருப்பூர், சேலம்,
ஈரோடு, நாமக்கல், தஞ்சாவூர், திருச்சி,
அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர்,
கரூர், தேனி, மதுரை, விருதுநகர்,
சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை,
கன்னியாகுமரி,ஆகிய மாவட்டங்களில்
பல இடங்களில், இடி, மின்னல்
மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை
பெய்யக்கூடும்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் நாகப்பன் பெருந்துறை தாலுகா.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக