தாராபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் பெண் பலி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 19 மே, 2025

தாராபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் பெண் பலி



தாராபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் பெண் பலி. தங்கையே அண்ணனுக்கு ஆறுதல் சொல்லும் நிகழ்வு பார்ப்போருக்கு நெஞ்சை உருக்களிக்கும் வேதனை.


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த ரங்கபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கனகமணி கணவனை இழந்த இவர் பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார் இவருக்கு விஷ்ணு (17) என்ற மகனும் அனுஸ்ரீ (15) என்ற மகளும் உள்ளனர் . மகன் பதினோராம் வகுப்பு முடித்து 12ஆம் வகுப்பு செல்லும் நிலையில் அதற்கான கட்டணத்தை பள்ளியில் செலுத்த மகன் விஷ்ணு உடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று பனிரெண்டாம் வகுப்புக்கான கட்டணத்தை செலுத்தி விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்லும் வழியில் தாராபுரம் உடுமலை சாலை அருகே கார் ஒன்று இவர்களை கடந்து திடீரென வலதுபுறம் திரும்பி உள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த விஷ்ணு ஓட்டிவந்த இருசக்கர வாகனம் நேராக காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கனகமணி தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . விஷ்ணு காயம் ஏதும் இன்றி உயிர் தப்பினார். தங்கையே அண்ணனுக்கு ஆறுதல் சொல்லும் நிகழ்வு பார்ப்போருக்கு நெஞ்சை உருக்களிக்கும் வேதனை.


இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த தாராபுரம் போலீசார் மூலனூர் உதவி கோட்ட பொறியாளர் திருமதி.இளம்பூரணம் என்பவரது காரை ஓட்டி வந்த தேனியை சேர்ந்த ஜெயக்குமார் என்ற ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad