பாஜக மாநில தலைவரை வரவேற்ற அதிமுக நிர்வாகிகள் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 19 மே, 2025

பாஜக மாநில தலைவரை வரவேற்ற அதிமுக நிர்வாகிகள்


திருப்பூருக்கு வருகை புரிந்த தமிழக பாஜக மாநில தலைவர்  நைனார் நாகேந்திரன் எம்எல்ஏவை அனுப்பர்பாளையம் பாத்திர கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவர்.கே. குணசேகரன்  மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்து வரவேற்றார். இந்த நிகழ்வில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிமுக தேர்தல் பிரிவு மாநில செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் MLA, திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் MLA,  முன்னாள் தெற்கு சட்டமன்ற உறுப்பினர், அம்மா பேரவை இணை செயலாளர் குணசேகரன் EX MLA, மாநகராட்சி மாமன்ற எதிர்க்கட்சி கொரடாவும் 44 வது வார்டு மாமன்ற உறுப்பினர்  எம். கண்ணப்பன் MC மற்றும் திருப்பூர் மாநகராட்சி மாமன்ற எதிர் கட்சி தலைவர் தென்னம்பாளையம் பகுதி கழக செயலாளர் அன்பகம் திருப்பதி மற்றும் அதிமுக நிர்வாகிகள் வரவேற்றனர்.

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad