ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பயணியர் நிழற்கூடம் பூமி புஜை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 19 மே, 2025

ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பயணியர் நிழற்கூடம் பூமி புஜை!

ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பயணியர் நிழற்கூடம் பூமி புஜை!
திருப்பத்தூர் , மே 19 -

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம் வெலக்கல்நத்தம் பகுதியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய பயணியர் நிழற்கூடம் அமைக்கும் பணியினை
திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும்,
ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பி னருமான க.தேவராஜி MLA  கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கட்டிட பணியினை தொடங்கி வைத்து சிறப்பித்தார்.அதனைதொடர்ந்து வெலக்கல்நத்தம் பகுதியில் பொது மக்கள் கழிவு நீர் கால்வாய் அமைக்க கோரிக்கை வைத்தனர், அதனை ஏற்று கழிவு நீர் கால்வாய் அமைக்க வேண்டிய இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில்
மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப் பாளர் எம்.சிங்காரவேலன், ஊராட்சி மன்ற தலைவர் ராமன்,கிளைக் கழக செயலாளர் சூரவேல் மற்றும் கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad