புதுடெல்லியிலிருந்து முதியோருக்கான ஓ.ஆர்.டி இல்லத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைப்பு !
வேலூர் ,மே 02 -
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள், புதுடெல்லியிலிருந்து முதியோருக்கான ஓ.ஆர்.டி இல்லத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைப்பு. வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பங்கேற்று சிறப்புரை
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, அரியூர் முதியோர் இல்லத்தில், மாண்புமிகு. இந்திய ஜனாதிபதி திருமதி.திரௌபதி முர்மு, அவர்கள் புதுடெல்லியிலிருந்து (02.05.2025) காணொளி காட்சி வாயிலாக அரியூரில் உள்ள அரசு சாரா நிறுவனத்தால் நடத்தப்படும் முதியோர்களுக்கான ORD முதியோர் இல்லத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி பங்கேற்று காணொளி காட்சி வாயிலாக இந்திய ஜனாதிபதி திறந்து வைத்ததை தொடர்ந்து குத்துவிளக்கேற்றி சிறப்புரையாற் றினார். இந்நிகழ்வில் சமூக நல அலுவலர் உமா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டார்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக